Peanut Candy (Kadalai Mittai) and its health benefits
கடலை மிட்டாய் என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு தமிழக தின்பண்டம். கடலை மிட்டாய் உடைத்து வறுத்த வேர்க்கடலை, மண்டை வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி கொண்டு செய்யப்படும் ஒரு தித்திக்கும் இனிப்புச் சுவையுடைய ஒரு தின்பண்டம் ஆகும். இந்த இனிப்பானது, வட இந்தியப் பகுதிகளில் சிக்கி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த கடலை மிட்டாய் வெவ்வேறு மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக இதைப்போன்ற தின்பண்டம் தென் அமெரிக்க நாடுகளிலும் உண்ணப்படுகின்றன. தமிழ் நாட்டை பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்ற ஊர் கடலை மிட்டாய்க்கு உலக அளவில் பெயர் பெற்றது. தினமும் பல ஆயிரக்கணக்கான கிலோ மதிப்புள்ள மிட்டாய்கள் உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கோவில்பட்டி ஊர் மண் வாசனையும், கடலைமிட்டாய் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் கை பக்குவம் தான் கடலை மிட்டாயின் அதிக சுவைக்கு காரணம் என்று பலர் நம்புகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிகமாக தரமற்ற மற்றும் செயற்கை முறையில் செரிவூட்டப்பட்ட தின்பண்டங்களை வாங்கி சுவைக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மிகவும் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளின் உணவு பழக்க வழக்கத்தில் சிறு வயதிலேயே மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு நமது தென்னிந்திய பாரம்பரிய உணவு தின்பண்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றம் முடியும். நம்ம ஊரு கோவில்பட்டி கடலை மிட்டாய் குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஒரு மிகச்சிறந்த சிற்றுண்டி. இந்த பதிவில் ஒருவர் கடலை மிட்டாய் தினமும் உண்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1) கடலை மிட்டாய் அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டு வரும். தசைகள் பலம் பெறும்.
2) அதிக எடை உள்ளவர்களின் எடை மிக எளிதாக குறையும்.
3) சாப்பாட்டுக்கு பின் கடலை மிட்டாய் சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
4) நிலக்கடலையில் நார்ச் சத்தும், கரையும் நல்ல கொழுப்பும் அதிகம் உள்ளது.
5) அதுமட்டுமின்றி புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.
6) அதேபோன்று வெல்லத்தில் இரும்பு சத்தும் கால்சியம் சத்தும் மிக அதிக அளவில் உள்ளது.
7) போலிக் அமிலம் நிறைந்து இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.
8) நிலக்கடலையில் பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பது மட்டுமல்லாமல் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
9) நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்
10) உடலின் இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது நம்ம ஊரு கடலை மிட்டாய்.
இத்தகைய பயன்கள் இருந்தாலும், இந்த நவீன காலத்தில் வீட்டில் பாரம்பரிய தின்பண்டங்களை செய்வது என்பது அதிக நேரம் வாய்ந்த ஒன்று. அதுமட்டுமின்றி கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் காலகட்டத்தில் இவற்றை வீட்டில் தயாரிப்பது சிறிது கடினமாகும். இன்றைய நவீன யுகத்தில் நொடிப்பொழுதில் இணைய தளத்தில் பாராம்பரிய தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பது அனைவரும் யோசிக்க கூடிய ஒன்று. அது மட்டுமல்லாமல் உலகளாவிய தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் மண் மணம் மாறாத இந்த கடலை மிட்டாயை அதன் பிரசித்தி பெற்ற இடத்திலேயே வாங்கி சுவைக்க விரும்புகிறார்கள். இதை பூர்த்தி செய்யும் விதமாகதான் www.snackative.com என்ற இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டது. எங்களுடைய இந்த இணைய தளம் நமது தென்னிந்தியாவின் பாரம்பரிய மிக்க தின்பண்டங்களை உலகெங்கும் தூதஞ்சல் மூலம் அனைவரின் வீட்டிற்கும் கொண்டு சேர்க்கிறது.
ஆகவே இத்தகைய பயனுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாயை ஆர்டர் செய்ய ஸ்னாகேடிவ்.காம்-இல் (www.snackative.com) பயனாளர் கணக்கை உருவாக்கி ஆர்டர் செய்யுங்கள். உங்கள் இல்லம் தேடி வரும் நம்ம ஊரு கடலை மிட்டாய்.